தமிழ் டிஜிட்டலில் தடம் பதிக்கும் ஜான்வி கபூர்: பா.இரஞ்சித், சற்குணம் கூட்டணியில் புதிய தொடர்!

தமிழ் டிஜிட்டலில் தடம் பதிக்கும் ஜான்வி கபூர்: பா.இரஞ்சித், சற்குணம் கூட்டணியில் புதிய தொடர்!

பாலிவுட் நடிகை ஜான்வி கபூர், தென்னிந்தியத் திரைப்பட உலகில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். தெலுங்கில் ராம் சரணுடன் நடித்த ‘பெத்தி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, தற்போது தமிழ் டிஜிட்டல் தளத்திலும் (OTT) அறிமுகமாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘நெட்பிளிக்ஸ்’ (Netflix) நிறுவனம் தயாரிக்கும் இந்த புதிய வெப் சீரிஸுக்கு ‘குறத்தி’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ‘களவாணி’, ‘வாகை சூட வா’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய சற்குணம் இத்தொடரை இயக்கவுள்ளார். மேலும், தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான பா.இரஞ்சித் இத்தொடரின் ஒருங்கிணைப்பாளராக (Showrunner) செயல்படவுள்ளார்.

இயக்குநர் சற்குணத்தின் எதார்த்தமான கதைகளம் மற்றும் பா.இரஞ்சித்தின் படைப்பாற்றல் கூட்டணி இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் வெகுவாக உயர்த்தியுள்ளது.

தென்னிந்திய திரையுலகில் தனது சந்தையை வலுப்படுத்தி வரும் ஜான்வி கபூர், இத்தொடரில் எந்த மாதிரியான கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கவுள்ளார் என்பதை அறிய சினிமா வட்டாரங்கள் மற்றும் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.