வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ (Vishwanath and Sons) திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட சில சுவாரசியமான புகைப்படங்களை (BTS Stills) படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.
இப்படத்தில் வசதி படைத்த தனித்து வாழும் தந்தையாக (Single Father) சூர்யாவும், அவரை விட வயதில் குறைந்த அவரது நிறுவன ஊழியராக மமிதா பைஜூவும் நடித்துள்ளனர். தலைமுறை இடைவெளி கொண்ட காதல் மற்றும் குடும்ப உணர்ச்சிகளை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
தனுஷ் நடித்த ‘வாத்தி’ திரைப்படத்திற்குப் பிறகு வெங்கி அட்லூரி தமிழில் இயக்கும் படம் இதுவாகும். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், நாசர், சுதா, ரகு பாபு, சுனில் ரெட்டி, பவானி ஸ்ரீ, வைவா ஹர்ஷா, காளி வெங்கட், ஜார்ஜ் மரியான், ஹைப்பர் ஆதி, ஸ்ரீஜா ரவி, சர்வதமன் பானர்ஜி, மேத்யூ வர்க்கீஸ், கல்யாணி நடராஜன் மற்றும் மாஸ்டர் சார்விக் உள்ளிட்டப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.
சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் நாக வம்சசியும், பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் சாய் சௌஜன்யாவும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் வழங்குகிறது. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, நிமிஷ் ரவி ஒளிப்பதிவையும், நவீன் நூலி படத்தொகுப்பையும் மேற்கொண்டுள்ளனர்.
The story you are about to experience was built on moments like these ❤️
Behind the scenes of #VishwanathAndSons 🫶🏻#VASonAUG14th @Suriya_offl #VenkyAtluri @_mamithabaiju @realradikaa @TandonRaveena @gvprakash @vamsi84 @NavinNooli @NimishRavi @Banglan16034849 @balajesaar… pic.twitter.com/zVLXBb3Skv
— Sithara Entertainments (@SitharaEnts) August 10, 2026

